About PPM Media

அஸ்ஸலாமு அலைக்கும்..

எல்லாப் புகழும் ஏகன் ஒருவனுக்கே

பெரியபட்டிணம் அன்பு சகோதரர்களே உங்களே ppmmedia.in வாயிலாக சந்திப்பில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

நமது ஊரின் மீடியாவாக அன்றாடம் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் வீடியோவின் மூலமாகவும் எழுத்துக்கள் மூலமாகவும் எழுதியும் வருகிறோம்.

சென்ற ரமலான் மாதத்தில் நமது பெண்களும் வெளிநாடுகளில் வசிக்கும் சகோதரர்களும் இஸ்லாம் தன் வாழ்வியல் நெறியாக ஈமானை நாம் எப்போதும் உறுதியாக வைக்க வேண்டும்.

என்பதற்காக ஜலால் ஜமால் ஜூம்ஆ பள்ளி ஆலீம் அவர்களும் நம் மண்ணின் மைந்தர்களும் ஊரின் மீடியாவாக இருக்கும் https://youtu.be/MqUSXVuduDM தொடர்ந்து பயான் செய்து வந்தோம்.

உங்களின் ஊக்கமும் உற்சாகமும் நம்மை இன்னும் நமது ஊர் மக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்று உணர்த்தியது ஆகையால் நமது ஊர் மக்களுக்கு எந்நேரமும் உதவும் பொருட்டு குருதி மாதிரி சேகரித்து அட்டவணை இடும் பணி PPM media group சகோதரர்களால் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

ஊரில் இருக்கும் பெரும்பான்மையான இளைஞர்கள் குருதி வகையை அட்டவணை இட்டு நம் ஊர் மக்களுக்கு எந்நேரமும் உதவ நாம் எப்போதும் தயாராக இருப்போம் என்றார்கள் !! அதுபோலவே இன்று இராமநாதபுரம் மருத்துவமனையில் அவசர குருதி தேவை இருக்கும் ஒருவருக்கு குருதி வேண்டும் என்று கேட்டதை அடுத்து உடனடியாக நமது ஊர் சகோதரர் ஒருவரைஅனுப்பி வைத்தோம் .

அல்ஹம்துலில்லாஹ் இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களிலும் நாம் நமது ஊர் மக்களுக்காக பல்வேறு பணிகளிலை செய்யலாம் என்று தீர்மானித்துள்ளோம் தாங்கள் இப்போது போலவே எப்போதும் ஆதரவு தருமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் !!
blood சேகரிப்பு முகாமிற்கு ஒத்துழைப்பு கொடுத்து இறுதிவரை துணையாக நின்று நமது PPMMEDIA Group சகோதரர்கள் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் நல்லருள் புரிவானாக ஆமீன்.

இறுதியாக ஒரு சகோதரரிடம் அவரது குருதியை சேகரிக்கும் போது அவரது குருதி பிறருக்கு உதவும் வகையில் அழைப்பு வந்தது உடனே நமது சகோதரர்கள் அவர்களிடம் எடுத்துக் கூறி குருதியின் தேவை அவர்களுக்கு கொடுப்பதற்காக விரைந்து சென்றனர் நமது PPMMEDIA Group சகோதரர்களுடன் இணைந்து மாஷா அல்லாஹ்

இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் நாம் என்ன பணியை மேற்கொள்ள வேண்டும் என்று பின்னூட்டம் இடுங்கள் நாம் ஒற்றுமையாக நின்று செய்வோம்.

நன்றி